விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

சோளிங்கர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-03-22 22:47 IST

சோளிங்கரை அடுத்த கல்லாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), விவசாயி. இவருக்கு சில நாட்களாக உ'ல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டு தெரிய வந்தது.

இதுகுறித்து அவரது மனைவி நதியா கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்