மின்னல் தாக்கி விவசாயி பலி
திருக்கடையூர் அருகே கிள்ளியூரில் மின்னல் தாக்கி விவசாயி இறந்தார்;
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் இடி மின்னலுடன் மழை தூறியது. கிள்ளியூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) விவசாயி. இவர் அதே பகுதியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் இளையராஜா சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளையராஜாவுக்கு அமுல் (35 )என்ற மனைவியும் அஜய் (17) என்ற மகனும், ஆர்த்தி (16) என்ற மகளும் உள்ளனர். மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.