மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானர்.;

Update:2023-05-09 00:15 IST

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அ.திருவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் உலகுசாமி (வயது 49) விவசாயி. இவர் தனது சித்தப்பா கோட்டைச்சாமி என்பவர் வீட்டில் மின்இணைப்பை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உலகுசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்