விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-07-16 23:45 IST

கொரடாச்சேரி அருகே உள்ள கீரனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது48). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். இதில் மயங்கி கிடந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்