கடலூர் முதுநகர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

கடலூர் முதுநகர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-07 01:40 IST

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜபிரகாஷ் (வயது 31), விவசாயி. இவருக்கும் சங்கீதா (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ராஜபிரகாஷ் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜபிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபிரகாஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்