மலைக்காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரியில் இயற்கை உரத்தை பயன்படுத்தி மலைக்காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-08-21 20:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, உரம், மற்றும் இடு பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு, வங்கிக்கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதாலும், இயற்கை விவசாயத்திற்கு தோட்டக்கலைத்துறை அதிக முக்கியத்துவம் அளிப்பதாலும் கோத்தகிரியில் விவசாயிகள் கோழிக்கழிவு, காளான் கழிவு உரம், சாண உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக சாகுபடி கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்