தாலுகா அலுவலகம் முன்பு தலை கீழாக நின்று விவசாயிகள் போராட்டம்

தாலுகா அலுவலகம் முன்பு தலை கீழாக நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-06-13 21:55 IST

கலசபாக்கம்

தாலுகா அலுவலகம் முன்பு தலை கீழாக நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், பட்டியந்தல், கட்டவரம், அருணகிரிமங்கலம், லாடவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்றி, சம்பா பயிர் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில விவசாயிகள் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கோரிக்கை மனுக்களையும் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர்கள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்