விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
திருப்புவனம்
திருப்புவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூசன் சரன்சிங்கை டெல்லி காவல்துறை கைது செய்யக்கோரியும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக டெல்லியில் போராடிய விவசாய சங்க மாதர் சங்க தலைவர்களை கைது செய்த மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஏங்கல்ஸ்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி, கரும்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன் நன்றி கூறினார்.