ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விரைவு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;

Update:2022-07-13 00:19 IST

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விரைவு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

நாளை முதல் இயக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. தொற்று குறைந்ததை தொடர்ந்து மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரயில் இயக்கப்படாததால் ரெயில் பயணிகளும், பொதுமக்களும் மீண்டும் ஈரோடு பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு இல்லாத பெட்டிகள்

அதன்படி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருப்பத்தூர், காக்கங்கரை, குன்னத்தூர், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூர், தொங்கனூர், புத்திரெட்டிபட்டி, பொம்முடி, லோகூர், டேனிஷ்பேட்டை, தின்னப்பட்டி, கருப்பூர், சேலம், வீரபாண்டி ரோடு, மகுடஞ்சாவடி, மாவெள்ளிபாளையம், சங்கரிதுர்க், ஆனங்கூர், காவிரி, ஆகிய 21 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. காலை 10.50 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

இந்த ரெயில் இன்று (புதன்கிழமை) ஈரோடு ரெயில் நிலையத்தில் மாலை 4.10 மணியளவில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. தொடர்ந்து வழக்கம்போல் தினசரி இயக்கப்படுகிறது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த ரெயிலில் 12 முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்