18 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் 18 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.

Update: 2023-10-02 18:45 GMT

நாகை மாவட்டத்தில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தலைமையில் வேதாரண்யம், தலைஞாயிறு, திருக்குவளை, கீழ்வேளூர், நாகை, திருமருகல் ஆகிய 6 ஒன்றியத்தில் 18 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. வீடு வீடாக சென்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் 1500 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு மட்டுமே சாதாரண காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்