மீன் சிலைகளை ரெயில் நிலையம் முன்பு வைக்கக்கோரிய மனு முடித்து வைப்பு

மீன் சிலைகளை ரெயில் நிலையம் முன்பு வைக்கக்கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.;

Update:2023-07-28 03:45 IST


மீன் சிலைகளை ரெயில் நிலையம் முன்பு வைக்கக்கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.

மீன் சிலை

மதுரையை சேர்ந்த ராமர்பாண்டியர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மீன் சிலைகளை மதுரை ரெயில் நிலைய நுழைவுவாயிலில் அமைத்தனர். ரெயில் நிலைய மறுசீரமைப்பின்போது மீன் சிலைகள் அகற்றப்பட்டன. மீண்டும் மீன் சிலைகளை நிறுவ உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடித்து வைப்பு

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இதே கோரிக்கைக்காக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மீன்சிலைகளை வைப்பது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்