போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்;
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி அடங்கிய குழுவினர் நாமக்கல்- பரமத்தி சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது அதிக பாரம் ஏற்றி சென்ற பயணியர் ஆட்டோ மற்றும் பல்வேறு போக்குவரத்து விதிமுறைமீறல்கள் கண்டறியப்பட்டு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் 20 கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெற இருப்பதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.