ஆமைக்கறி சமைத்தவருக்கு அபராதம்
கடையம் அருகே ஆமைக்கறி சமைத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
கடையம்:
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டம் கடையம் வனச்சரக வெளிமண்டல பகுதியான சிவசைலம் பீட்டின் அருகே மலையானம்குளம் குளத்தின் அருகில் இசக்கிமுத்து (வயது 40) என்பவர் குளத்தில் ஆமையை பிடித்து கறி சமைத்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி தலைமையில் சிறப்பு தனி குழுவினர் அங்கு சென்றனர்.
அங்கு சமைத்து வைத்திருந்த கறியை பறிமுதல் செய்தனர். இசக்கிமுத்துவை கையும், களவுமாக பிடித்து விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி அவருக்கு அபராதமாக ரூ.25 ஆயிரம் விதிக்கப்பட்டது.