ஈரோடு பெரியவலசில் தீ விபத்து

ஈரோடு பெரியவலசில் தீ விபத்து ஏற்பட்டது;

Update:2023-06-01 02:39 IST

ஈரோடு பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்தவர் சிவானந்தன். இவரது வீட்டின் மாடியில் ஓலை, தகரத்தால் கொட்டகை அமைத்து, அதில் பயன்பாடு இல்லாத பொருட்களை போட்டு வைத்திருந்தார். இந்தநிலையில் சிவானந்தன் வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் இருந்து நேற்று காலை கரும்புகை வெளிவந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்