நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கி வளாகத்தில் தீ

திருவாடானை அருகே நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-07-23 00:15 IST

தொண்டி,

திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சேரும் குப்பை கழிவுகளை கிட்டங்கியின் பின்புறம் கொட்டி வந்துள்ளனர்.இதனால் அதிக அளவில் அந்தப் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடந்துள்ளன. நேற்று திடீரென அதில் தீ பற்றி உள்ளது.அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அப்பகுதியில் அதிகமாக பரவியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதன் அடிப்படையில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்