பவானிசாகர் அருகே தீ விபத்து

பவானிசாகர் அருகே தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-09-05 06:47 IST

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). இவர் தனது தோட்டத்தில் மாடுகள் கட்டுவதற்கு கூடாரம் அமைத்திருந்தார். இங்கு நேற்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கூடாரத்தில் இருந்த விசைக்கலப்பை முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் மாட்டுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆடு மேய்ப்பவர்கள் சமையல் செய்து விட்டு தீயை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்