கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய 250 ஏக்கர் பயிர்கள்

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.;

Update:2022-08-07 14:27 IST

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் வைப்பூர் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து குறையாததால், விவசாய நிலங்களில் நீர் வடியாமல் உள்ளது. இதனால் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே பயிர் சேதத்தை கணக்கீடு செய்து அரசு தங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்