திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், நாகர்கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மோட்ச தீபம் ஏற்றியதால் கைது செய்யப்பட்டார்.;
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி பூர்ணசந்திரன் என்ற வாலிபர் கடந்த 18-ந் தேதி மதுரை தல்லாகுளத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பூர்ணசந்திரனுக்காக நாகர்கோவில் வடசேரியில் அனுமதியின்றி நேற்று மோட்ச தீபம் ஏற்றிய நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் கவுன்சிலர் சுனில்குமார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் பூர்ணசந்திரனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மோட்சதீபம் ஏற்றிய இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.