எனக்கு பதவி, பொருள் ஆசை இல்லை: திருமாவளவன்

கூட்டணிக்காக மக்களை மறந்து ஒருபோதும் சிந்தித்ததில்லை என்று திருமாவளவன் கூறினார்.;

Update:2025-12-21 07:05 IST

மதுரை,

மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

தேர்தல் அரசியலில், கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். தி.மு.க.வை நீங்கள் ஏன் உயர்த்தி பிடிக்கிறீர்கள் என சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டு கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க. அரசை வி.சி.க.வைப் போல் கண்டித்து நடத்திய போராட்டங்களைப்போல் எந்த கட்சியினரும் நடத்தி இருக்க முடியாது.

தேர்தலை பற்றி தேர்தலின்போது மட்டுமே சிந்திப்பேன். பதவி எனக்கு பெரிதல்ல. நான் 10 சீட் கூடுதலாக கேட்டு வாங்குவதால் புரட்சி ஏற்படப்போவதில்லை. தேர்தல் களத்தில் நான் எடுக்கும் முடிவுகள், உங்களது பார்வையில் குறை உள்ளதாக இருக்கலாம். ஆனால், கூட்டணிக்காக மக்களை மறந்து என்னுடைய நலன் குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை.

பதவி, எம்.எல்.ஏ. சீட் எண்ணிக்கை பெரிதாக நினைத்திருந்தால், எங்கு அதிகமாக கொடுக்கிறார்களோ அந்த இடம் தேடி ஓடியிருப்பேன். எனக்கு பதவி ஆசை, பொருள் ஆசை இல்லை. பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்