காபி செடிகளில் பூக்கள் பூத்தன

வால்பாறையில் காபி செடிகளில் பூக்கள் பூத்தன.;

Update:2023-03-26 00:15 IST

வால்பாறை, 

வால்பாறை பகுதியில் ஆரம்பத்தில் காபி செடிகள் மட்டும் பயிரிடப்பட்டு வந்தது. இதில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் கிடைக்கும் என்பதால், காபி செடிகளை பயிரிட்டு இருந்த காபி தோட்ட நிர்வாகத்தினர் காபி செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்தனர். பின்னர் ஆண்டு முழுவதும் பயன் தரும் வகையில் தேயிலை செடிகள் பயிரிடப்பட்டது.

12 ஆயிரத்து 678 ஹெக்டர் பரப்பளவில் தேயிலை செடிகளும், 4 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் காபி செடிகளும் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த காபி செடிகளில் ஏப்ரல் மாதத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பழுத்து காபி பழங்களாக மாறி விடும். பின்னர் காபி பழங்கள் பறிக்கப்படும். தற்போது வால்பாறையில் கோடை மழை பெய்ததால் காபி செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. அரபிக்கா, ரோபஸ்ட்டா என 2 வகை காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. மழை காரணமாக முன்கூட்டியே பூத்து உள்ளதால், வருகிற ஆண்டில் காபி உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்