முன்னாள் ஐ.ஐ.டி. பேராசிரியர் சைக்கிள் பயணம்

முன்னாள் ஐ.ஐ.டி. பேராசிரியர் சைக்கிள் பயணம் மேற்ெகாண்டார்.

Update: 2023-02-14 19:43 GMT


புதுடெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசிரியர் கிரண் சேத் (வயது73), பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவர் பாரம்பரிய இசை கலாசாரத்தை இளைஞர்களிடையே மேம்படுத்தும் வகையில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று விருதுநகர் வந்த அவர் கூறியதாவது:- 3 முக்கிய காரணங்களுக்காக இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். முதலாவதாக நாட்டின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் குறித்து ஆர்வத்தை இளைஞர்களிடையே அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணம் சிறந்தது. அனைவரும் சைக்கிள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கேடும் இல்லை. மூன்றாவதாக காந்தியின் எளிய வாழ்க்கை முறை சிந்தனைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பயணம் மேற்கொண்டு கல்லூரி மாணவர்களையும், இளம் தலைமுறையினரையும் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். இதுவரை 14 மாநிலங்களை கடந்து தமிழகம் வந்துள்ளேன். பரதநாட்டியம் குறித்து கல்லூரி மாணவர்களிடம் புரிதல் இல்லை. தமிழகம் கலாசாரம் பண்பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலமாக கருதப்படுகிறது. இளம் தலைமுறை அதனை பாதுகாப்பதுடன் பின்பற்றவும் வேண்டும் என்றார். கடந்த ஆகஸ்டு 11-ல் ஸ்ரீநகரில் இந்த யாத்திரையை தொடங்கியவர் பிப்ரவரி 19-ந் தேதி கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்