நான்கு கிளைகளுடன் அதிசய தென்னைமரம்
மன்னார்குடியில் நான்கு கிளைகளுடன் உள்ள அதிசய தென்னைமரத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.;
மன்னார்குடி;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தஞ்சை சாலையில் மன்று நகரில் சாலையோரத்தில் தனியார் இடத்தில் வரிசையாக தென்னை மரங்கள் உள்ளன. இதில் ஒரு தென்னை மரம் 30 அடி உயரத்தில் இரண்டு கிளைகள் வளர்ந்துள்ளன.அதில் ஒரு கிளையில் தென்னை மட்டைகளுடன், தேங்காய் காய்த்துள்ளது. இதே போல் மற்றொரு கிளையில் இருந்து மூன்று கிளைகள் வளர்ந்துள்ளன. அதிலும் தேங்காய்கள் காய்த்துள்ளன. பொதுவாக தென்னை மரத்தில் கிளைகள் வளராது. ஆனால் இந்த தென்னை மரத்தில் அதிசயமாக நான்கு கிளைகள் வளர்ந்திருக்கிறது. இந்த அதிசய தென்னை மரத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள் வளர்ந்து அதில் தேங்காய்கள் காய்த்துள்ளது காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.