போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.80 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.80 லட்சம் மோசடி நடந்துள்ளது.

Update: 2023-04-08 17:56 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சீபுரம் அனகாபுதூர், திம்மசமுத்திரம் திவ்யா நகரை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அரசு வேலை வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் போலி பணி ஆணைகளை வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி ஆகிய வட்டார பகுதிகளில் படித்து வேலைக்காக காத்திருக்கும் வறுமையில் வாடும் குடும்ப இளைஞர்கள், இளம் பெண்களிடமும் இத்தகைய மோசடியில் அவர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பலரது கையெழுத்துகளுடன் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கி ரூ.80 லட்ச ரூபாய் அளவுக்கு வசூலித்து இருப்பது தெரிய வருகிறது. கொடுத்த பணத்தை கேட்ட போது அவர் தர மறுத்துள்ளார். பணம் வசூல் செய்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட மக்களுடன் புகார் தெரிவித்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை கிராமத்தில் இருந்து கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து தன்னைக் கொல்ல வருவதாக நாடகமாடி பாதிக்கப்பட்ட நபர்களையே கைது செய்ய அவர் வைத்துள்ளார். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்