அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

வரட்டனப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-08-27 16:37 GMT

பர்கூர்

பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 97 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 46 மாணவர்கள், 51 மாணவிகள் என 97 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், மாவட்ட கவுன்சிலர் கலையரசி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் பிரித்திகா, ஒன்றிய துணை செயலாளர் செல்வம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்