சேத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.;
சேத்தூர் சேவகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.