இலவச கண் பரிசோதனை முகாம்

நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.;

Update:2022-11-04 01:58 IST

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி மற்றும் ஐ.கி.யூ.ஏ.சி. இணைந்து செய்து இருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்