இட்டமொழி:
நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பரப்பாடி பரிசுத்த திரித்துவ ஆலயம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை சின்னகோவில் பரிசுத்த ஸ்தேவான் ஆலயத்தில் நடத்தியது. சேகரகுரு ஆபிரகாம் அருள்ராஜா ஜெபித்து முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டபிள்யூ.ராஜாசிங், ஜேக்கப் பாண்டி, கோயில் பிச்சை, எழுத்தாளர் மதுரா, பெருமன்ற உறுப்பினர் யோவான் பிரபு, சேகர செயலாளர் பொன்னுத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவில் சபை ஊழியர் கிறிஸ்டோபர் சிங் நன்றி கூறினார்.