அ.தி.மு.க.வுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கிய 4 நிர்வாகிகள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
அ.தி.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.தி.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் பேரூராட்சி செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணை செயலாளர் சீனி காதர்மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணை செயலாளர் பக்கர், மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர் ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
எனவே கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.