தமிழக அரசு சார்பில் - சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தமிழக அரசு சார்பில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

Update: 2023-02-23 18:45 GMT

காளையார்கோவில்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டலம் சார்பில் காளையார் கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை மண்டல இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ் வரவேற்றுப் பேசினார்.உதவி ஆணையர்கள் ஞானசேகரன், சிவராம் குமார், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், பிச்சுமணி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். மேலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

பீரோ, மெத்தை, கட்டில், கியாஸ் அடுப்பு, சமையல் பாத்திர சாமான்கள், குத்துவிளக்குகள் ஆகியவை சீர்வரிசைப் பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.ராமேசுவரம் கோவிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், பேஷ்கார்கள் கமலநாதன், முனியசாமி, மேனேஜர் மாரியப்பன், நகரசபை துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர் ராஜாத்தி, தி.மு.க. நிர்வாகி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் புதுமண தம்பதிக்கும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்