தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பழச்செடி

வேளியநல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பழச்செடிகள் வழங்கப்பட்டது.;

Update:2023-10-17 00:38 IST

நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளியநல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பழச்செடி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சண்முகம் தலைமை தாங்கினார். நெமிலி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மானியத்தில் மா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, சீதா ஆகிய செடிகளை வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரம்யா ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்