பயணிகளிடம் செல்போன், மடிக்கணினி திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பயணிகளிடம் செல்போன், மடிக்கணினி திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update:2022-07-21 01:58 IST

கடந்த 2-ந் தேதி திருச்சி ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜங்ஷன் நடைமேடை பெஞ்சில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,030-ஐ பறித்து கொண்டு ஓடியதாக அளித்த புகாரின்பேரில், ஆல்வின்குமார் (வயது 32) என்பவர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் ஆல்வின்குமார் மீது திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் மடிக்கணினி திருடிய 2 வழக்கும், சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் மடிக்கணினி திருடிய 4 வழக்கு உள்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஆல்வின்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆல்வின்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்