குடவாசல்:
குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா (பொறுப்பு) மற்றும் போலீசார் குடவாசல் பகுதியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குடவாசல் அகர ஓகை சிவன் கோவில் அருகே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் சோதனை செய்த போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதேபகுதியை சேர்ந்த இளையராஜா (வயது38) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.