பெருந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
பெருந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது;
பெருந்துறை
பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி பகுதியை சேர்ந்தவர் ஆரான் என்கிற ஆறுமுகம் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரானை கைது செய்தனர்.