உரிமைத்தொகைக்கு நன்றி தெரிவித்து கோலம்
கூடலூரில் கலைஞரின் உரிமைத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கோலமிடப்பட்டது.;
தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 நேற்று முன்தினம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கூடலூரில் உரிமைத்தொகை பெற்ற பயனாளிகள் பலர் தங்களது வீடுகளின் முன்பு உரிமைத்தொகை கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டு கோலமிட்டனர்.