சிவகங்கை மாணவி தங்கப்பதக்கம்

சிவகங்கை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.;

Update:2022-11-28 00:15 IST

பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ. மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் சிவகங்கை ஆக்ஸ்போர்ட் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சா.பிரத்திகா மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இது தவிர 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் பெற்ற மாணவி பிரத்திகாவை ஆக்ஸ்போர்ட் பள்ளி தாளாளர் சியாமளா வெங்கடேசன், நிர்வாகி மீனா, மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் ராமசாமி, தடகள பயிற்சியாளர் ஆறுமுகம், உடற்பயிற்சி ஆசிரியர் அமுதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்