கல்லூரி மாணவர்களுக்கு சவால் விடும் அரசு பள்ளி மாணவி - மின்சார ரெயிலில் காலை தேய்த்துக் கொண்டே ஆபத்தான பயணம்...!

சென்னையில் மின்சார ரெயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் நடைமேடையில் காலை தேய்த்துக் கொண்டே ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-18 05:21 GMT

சென்னை

சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரெயிலில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ஏறி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயண் செய்தார். பின்னர், ரெயில் வேகமாக செல்லத் துவங்கிய போது, நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார்.

ரெயில், பஸ்களில் கல்லூரி மாணவர்கள் சேட்டை தான் தாங்க முடியாது என்றால், அவர்களுக்கே சவால் விடும் வகையில் பள்ளி மாணவிகளும் ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிர்ச்சி அடையச் செய்கிறது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்