அரசு பஸ்களை நீட்டிக்க வேண்டும்
அரக்கோணத்தில் இருந்து சாலை கிராமம் வரை அரசு பஸ்களை நீட்டிக்க வேண்டும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரக்கோணம் தாலுகா அன்வர்திகான்பேட்டை கிராமத்துக்கு 40 வருடமாக ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டது. இதனால் அன்வர்திகான்பேட்டையை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரக்கோணம் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அரக்கோணத்தில் இருந்து சாலை கிராமம் வரை இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களையும் அன்வர்திகான்பேட்டை வரை நீட்டிக்க போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.