கிணத்துக்கடவு,ஜூன்.27-
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது 39). கூலி தொழிலாளி. இவர் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த 65 வயது மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து அந்த மூதாட்டி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், வேலுச்சாமியை பிடித்து பேரூர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அங்கு புகார் மாற்றப்பட்டது. பின்னர் பேரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலுச்சாமியை கைது செய்தனர்.