அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2½ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2½ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்;
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கடலை (காய்ந்தது) 96 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 10-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 202-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 99-க்கு விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோவை, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் நிலக்கடலையை ஏலம் எடுத்து சென்றனர்.