ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது;

Update:2023-05-14 03:02 IST

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கடலை 155 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 319-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்துக்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இ்ங்கு வந்து நிலக்கடலையை ஏலம் எடுத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்