குரூப்-4 தேர்வு வினாத்தாள் மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு
குரூப்-4 தேர்வு வினாத்தாள் மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு செய்தாா்.;
திண்டிவனம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முனியநாதன், திண்டிவனம் கருவூலத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், குரூப்-4 தேர்வுக்காக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் மையத்தையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன், உதவி கருவூல அலுவலர் மல்லிகா மற்றும் வருவாய்த்துறை, கருவூல அதிகாரிகள் உடன் இருந்தனர்.