தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை;

Update:2022-07-31 22:04 IST

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் அய்யனார்(வயது 45). இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அய்யனார் தனது வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தீராத வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்