தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை;

Update:2022-11-25 00:15 IST

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி ஒற்றவயலை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கபீர் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் கபீர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே உறவினர்கள் தேடியபோது தேவன்-2 பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கபீர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தேவர்சோலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திஷ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்