குடவாசல் அருகே உள்ள கீரங்குடி கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது35). கூலித்தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மதியம் 3 மணிக்கு மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சிவரஞ்சனி, ஏன் தினமும் மதுகுடித்துவிட்டு வருகிறாய் என்று கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த கணேசமூர்த்தி தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்து சிவரஞ்சனி அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கணேசமூர்்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சிவரஞ்சனி குடவாசல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கணேசமூர்த்தி உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.