இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-07-15 00:15 IST

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பனை மற்றும் தென்னையில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில், பல்வேறு இடங்களில் கள் குடிக்கும் போராட்டம் நடந்தது. அதன்படி நெல்லை டவுன் வாகையடி முனையில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் பதனீர் குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பகுதி தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரியப்பன் பதனீர் குடித்து போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் அய்யப்பன், வெங்கடேஷ், முத்துப்பாண்டி, ஆறுமுகம், செல்லத்துரை, பெருமாள் உத்தண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்