இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடியில் கடந்த வாரம் மனு ஸ்மிருதி புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கு வழங்கினர். இதற்கு அனுமதி வழங்கிய தி.மு.க. அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று சிவன் கோவில் முன்பு பெரியார் எழுதிய இறுதிப்பேருரை மரண சாசனம் புத்தகத்தின் 21-வது பக்க அச்சு பிரதியை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்த குமார் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக தி.மு.க. அரசை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து போராட்டம் செய்த இந்து மக்கள் கட்சியினர் 13 பேரை கைது செய்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.