மின் கசிவால் பற்றி எரிந்த வீடு - பக்கத்து வீட்டுக்கும் பரவியதால் சோகம்

பண்ருட்டி அருகே, நள்ளிரவில் மின் கசிவு காரணமாக, கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-12-25 16:05 IST

கடலூர்,

பண்ருட்டி அருகே, நள்ளிரவில் மின் கசிவு காரணமாக, கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது கூரை வீட்டில், மின் கசிவு காரணமாக தீப்பற்றியது. இதனிடையே, தீ மளமளவென அடுத்தடுத்த கூரை வீடுகளுக்கும் பரவியதால், வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 3 வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

Tags:    

மேலும் செய்திகள்