பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
மல்லப்பாடி ஊராட்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
பர்கூர்
பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சரோஜினி 6 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் சம்சுதீன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், துணைத்தலைவர் ஜெகதீசன், ஊராட்சி செயலாளர் சசி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.