தமிழகத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு எத்தனை? ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;

Update:2024-05-08 17:48 IST

மதுரை,

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன், நீதிபதி தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

அதோடு மொத்தமாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்