மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.;
ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். 81 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 47 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 53 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 77 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 700 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.